ஒலிம்பிக்ஸ்-ல் கவனம் ஈர்த்த 7 மாத கர்ப்பிணி போட்டியாளர்

59பார்த்தது
ஒலிம்பிக்ஸ்-ல் கவனம் ஈர்த்த 7 மாத கர்ப்பிணி போட்டியாளர்
பாரீஸ் ஒலிம்பிக்ஸில் 7 மாத கர்ப்பிணியான எகிப்திய வாள்வீச்சு வீராங்கனையான நடா ஹஃபீஸ், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 16-வது சுற்றில் தோல்விக்கு பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “போட்டிக் களத்தில் இரண்டு பேர் இருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இங்கிருப்பது மூன்று பேர். ஆம். நான், என்னுடைய போட்டியாளர் மற்றும் இன்னும் நம் உலகிற்கு வராத என்னுடைய குழந்தை! என் குழந்தையும் நானும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் உள்ள சவால்களை எதிர் கொண்டுள்ளோம்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி