74 வாக்குறுதிகள் - மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

70பார்த்தது
74 வாக்குறுதிகள் - மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது. மதிமுக சார்பில் வைகோவின் மகன் துரை வைகோ திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. '24 உரிமை முழக்கம்' என்ற பெயரில் 74 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் கூடவே கூடாது, குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்ப பெற வேண்டும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், கூடங்குளம் அணுமின் நிலையம் மூடல் உள்ளிட்ட 74 வாக்குறுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி