வங்கதேசம் கலவரத்தால் அமைதியை இழந்துள்ளது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்நிலையில், வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்நாட்டில் உள்ள ஷெர்பூர் மாவட்ட சிறையில் இருந்து 500 கைதிகள் தப்பியோடினர். சிறைக்குள் இருந்த கைதிகள் கலவரத்தை ஏற்படுத்தியவர்களின் உதவியுடன் தப்பியதாக ஷெர்பூர் துணை கமிஷனர் அப்துல்லா அல் கைருன் கூறியுள்ளார்.