பாலஸ்தீனிய தீவிரவாதிகள் 400 பேர் பலி

289பார்த்தது
பாலஸ்தீனிய தீவிரவாதிகள் 400 பேர் பலி
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர் வீட்டில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவ தாக்குதலில், பாலஸ்தீனிய தீவிரவாதிகள் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகேரி தகவல் தெரிவித்துள்ளார். தெற்கு இஸ்ரேல் மற்றும் காசா பகுதியில் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய தீவிரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளது. ஏராளமான பாலஸ்தீனிய தீவிரவாதிகளை பிடித்து வைத்துள்ளதாகவும் இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி