ஏற்றுமதிக்கு 40% வரி - வெங்காய விவசாயிகள் வேதனை

85பார்த்தது
ஏற்றுமதிக்கு 40% வரி - வெங்காய விவசாயிகள் வேதனை
திருப்பூா் பல்லடம், பொங்கலூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி பரவலாக செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயம் தாய்லாந்து, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது வெங்காயம் ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரியும் விதித்துள்ளதால் சின்ன வெங்காயம் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால், சின்ன வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரியை நீக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி