தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 07) 8 மாவட்டங்களில் கனமழை

80பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 07) 8 மாவட்டங்களில் கனமழை
இன்று (ஜூன் 07) தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் கடந்த சில மாதங்களாக வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், ஜூன் மாதம் ஆரம்பித்ததை தொடர்ந்து மழைப்பொழிய தொடங்கி உள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி