நயினாரை துரத்தும் ரூ.4 கோடி விவகாரம்

57பார்த்தது
நயினாரை துரத்தும் ரூ.4 கோடி விவகாரம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிப்பட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்த நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை என நெல்லை மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவர் மீது அமலாக்கத்துறை உத்தரவிட வேண்டும் எனவும், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை இந்த மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி