டெல்லி பதர்பூரில், பூட்டியிருந்த வீட்டில் அழுகிய நிலையில் 3 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் அருந்தி தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல்கள் அழுகிய நிலையில் உள்ளதால் அவை சுமார் 4-5 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மூவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் ஒரு அறையில் சடலமாக கிடந்துள்ளனர். போலீசார் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.