திண்டுக்கல் முஜீப் பிரியாணி, ஹோட்டல் அசோசியேஷன் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களுக்கு உதவி செய்வதற்காக மொய் விருந்து புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, தயிர் வெங்காயம், நெய் சாதம் ஆகியவை வழங்கப்பட்டது. இங்கு சாப்பிட வந்தவர்கள் சாப்பிட்டு முடித்த பின் இலைக்கு அடியில் தங்களால் முடிந்த பணத்தினை வைத்து சென்றனர். இதில் ரூ.2,16,074 ரொக்கப்பணம் கிடைத்தது.