லாஸ் ஏஞ்சல்சில் 97ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில், லைவ் ஆக்ஷன் குறும்படப் பிரிவில் குணீத் மோங்கா கபூரின் 'அனுஜா' திரைப்படம் விருது பெறும் என பலரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த நிலையில், ‘ஐ'ம் நாட் எ ரோபோ’ என்ற படத்திடம் தோல்வியடைந்ததால், இந்தியாவின் 2025 ஆஸ்கார் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. ‘ஐ'ம் நாட் எ ரோபோ’ என்பது விக்டோரியா வார்மர்டாம் எழுதி இயக்கிய டச்சு மொழி அறிவியல் புனைகதை குறும்படம் ஆகும்.