தமிழக சுற்றுலா பயணிகள் 2 பேர் கேரளாவில் உயிரிழப்பு

57பார்த்தது
தமிழக சுற்றுலா பயணிகள் 2 பேர் கேரளாவில் உயிரிழப்பு
கேரளாவின் இடுக்கி மாவட்டம் வட்டக்கண்ணிப்பாறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி உட்பட இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சிவகங்கையைச் சேர்ந்த ரஜீனா (20) மற்றும் சனா (7) என அடையாளம் காணப்பட்டனர். 21 பேர் கொண்ட சுற்றுலாக் குழு கேரளாவுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், உடும்பஞ்சோலை பகுதியில் அதிவேகமாக பயணித்த வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பயணிகளில் நான்கு குழந்தைகள் இருந்ததாகவும், விபத்தில் பலர் காயமடைந்ததாகவும் போலீசார் கூறினர். காயமடைந்த அனைவரையும் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி