பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இருக்கும் பொற்கோயிலுக்கு மிக அருகில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜாலியன் வாலாபாக் பூங்கா அமைந்துள்ளது. 13 ஏப்ரல் 1919 அன்று ஜாலியன் வாலாபாக் தோட்டத்தில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய
விடுதலை இயக்கத்தினர் கூடியிருந்தனர். அவர்கள் மீது முன் அறிவிப்பு ஏதுமின்றி ஆங்கிலேயே ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் டயர் தலைமையிலான இராணுவத்தினர் 1650 ரவுண்டு துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர். இந்த படுகொலையில் இறந்தவர்கள் சுமார் 379 பேர்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இதில் அடக்கம். மேலும் 1110 பேர் படுகாயம் அடைந்தனர்.