திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே அரசு பேருந்து நிறுத்தாததால் தேர்விற்கு செல்லும் +2 படிக்கும் மாணவி பேருந்தின் பின்னால் ஓடிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோத்தக்கோட்டை நிறுத்தத்தில் மாணவி நின்றிருந்த போது அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதால், அந்த மாணவி ஓடிச் சென்று பேருந்தில் ஏறினார். இதன் வீடியோ வைரலானதை அடுத்து பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.