2023ம் ஆண்டில் 2,16,219 பேர் இந்திய குடியுரிமையை வேண்டாம் என துறந்து விட்டு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் தகவல் அளித்துள்ளார். மேலும் அவர், "இந்தியர்கள் தங்களது குடியுரிமையைத் துறப்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம். இன்றைய அறிவுசார் பொருளாதாரத்தில் உலகளாவிய பணியிட திறனை அரசும் அங்கீகரிக்கிறது" எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.