தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் பதில் அளித்துள்ளது. அதன்படி, கடந்த 2019ம் ஆண்டில் இருந்து நடப்பாண்டு வரை 18,179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிறப்பு குழந்தைகள் எனப்படும் மாற்றுத்திறனாளிகள் 1,404 பேர் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆரோக்கியமான குழந்தைகளை தத்தெடுப்பதில் போட்டி நிலவுவதாகவும், சிறிதளவு குறைபாடு இருந்தாலும் தத்தெடுக்க யாரும் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது.