ஹரியானா: 15 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த வெள்ளி (டிச. 13) திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸில் குறைபிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்தார். இதையடுத்து சிறுமியின் தந்தை போலீசில் அளித்த புகாரில், "வீட்டு பக்கத்தில் உள்ள கடைக்காரர் என் மகளுக்கு போதை பொருட்களை கட்டாயப்படுத்தி கொடுத்து சீரழித்திருக்கிறார்" என்று குறிப்பிட்டார். இதையடுத்து தலைமறைவான கடைக்காரரை போலீசார் தேடுகின்றனர்.