மோடியுடன் 15 அமைச்சர்கள் பதவியேற்பு?

10073பார்த்தது
மோடியுடன் 15 அமைச்சர்கள் பதவியேற்பு?
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 3வது முறையாக இன்று (ஜுன் 9) பதவியேற்க உள்ளார். இன்று மாலை 7.15 மணிக்கு விழா தொடங்கியதும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பிரதமராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். அதே போல் புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ள 15 அமைச்சர்களும் மோடியுடன் பதவியேற்றுக் கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் 5 அமைச்சர் பதவிகள் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி