சமீபகாலமாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், முதலீட்டாளர்களின் வட்டியை மீட்க சுமார் 1400 பேரைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் ரூ.60 கோடி வரை மிச்சம் பிடிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் தற்போது அந்நிறுவனம் சார்பில் இயங்கும் 30 விமானங்களுக்கு 9000 பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.