கைகளை ஒழுங்காக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப் போக்கு மற்றும் நிமோனியாவால் உலக அளவில் கிட்டத்தட்ட 14 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் இறக்கின்றனர். இந்தியாவில் ஏறத்தாழ 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் ஒரு லட்சம் குழந்தைகளை இழக்கவும் நேரிடுகிறது. முறையான கை கழுவுதலை ஊக்குவிப்பதன் மூலம் இந்த நோய்கள் பரவுதலையும், குழந்தைகளையும் காப்பாற்ற முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.