கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி

54பார்த்தது
கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி
எகிப்து நாட்டின் கிசா மாகாணம் கெர்டாசா நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த கட்டிட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கேஸ் சிலிண்டர் வெடித்து குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி