விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவர் சிவகாசி சாத்தூர் சாலையில் சிவகாமிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது சாலை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது அருண்குமார் என்ற நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் செல்வி காயம் அடைந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.