இந்நிலையில் சிவகாசி உட்கோட்டம் முழுவதும் குற்றவழக்குகளில் ஈடுபட்டவர்களையும், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களை கைது செய்ய மாவட்ட எஸ்பி கண்ணன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அந்தவகையில் சிவகாசி உட்கோட்டம் முழுவதும் போலீசார் அதிரடியாக வேட்டை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறாகவும், சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்த 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் கொலை, வழிப்பறி, அடிதடி மற்றும் திருட்டு உள்ளிட்ட பல குற்றவழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளும், வரலாற்று பதிவேட்டில் கண்காணிக்கப்பட்டவர்களும் ஆவர். தொடர்ந்து போலீசார் தீவிர அதிரடி சோதனை நடத்தி கைது செய்தனர். மேலும் குற்றவாளிகளின் பெயர், விபரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். சட்டம், ஒழுங்கு பிரச்சினை வராமல் தடுக்கும் போலீசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.