உடுமலையில் கிராம உதவியாளர் அதிரடியாக சஸ்பெண்ட்

திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் கருப்புசாமி கடந்த 23ஆம் தேதி கூல நாயக்கன் பெட்டியில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோமங்கலம் காவல்துறையினர் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்த நிலையில் 24-ஆம் தேதி கருப்புசாமி தன் கைப்பட எழுதிய மரண வாக்குமூலம் கடிதத்தை உறவினர்கள் இளவரசன் கோகுல் சந்துரு ஆகியோர் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் வாங்கினர்.

கருப்பு சாமியின் மரண வாக்குமூலம் கடிதம் கிடைத்த நிலையில் கோமங்கலம் காவல்துறையினர் தற்கொலை வழக்கை மாற்றி தற்கொலைக்கு தூண்டுதல் என மாற்றி பதிவு செய்தனர். இந்த நிலையில் மரண வாக்கு மூலத்தில் கருப்புசாமி தன் சாவுக்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருந்த கிராம உதவியாளர் சித்ரா, மக்கள் மித்ரன் மணியன் தான் காரணம் என எழுதி இருந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்புச்சாமியின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தற்சமயம் உடுமலை வட்டாட்சியர் கணக்கம்பாளையம் ஊராட்சி கிராம உதவியாளராக
பணியாற்றி வந்த சித்ராவை சஸ்பெண்ட் செய்து அவரது வீட்டின் முன்பு சஸ்பெண்ட் உத்தரவு நகல் ஒட்டப்பட்டது. மேலும் கோமங்கலம் காவல் துறையினர் கருப்புசாமி தற்கொலைக்கு தூண்டிய இருவரை தனிபடைகள் அனைத்து அமைத்து தேடி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி