உடுமலையில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியை புதியதாக உருவாகும் பழனி மாவட்டத்துடன் இணைக்கப்படுவதாக கடந்த சில தினங்களாகவே வைரல் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, உடுமலை மடத்துக்குளம் மக்கள் பாதுகாப்பு சங்கம் ஒருங்கிணைப்பாளர்கள் இன்று உடுமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்கினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, உடுமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அவர் பேசுகையில், "தற்போது இரண்டு அமைச்சர்கள் சுய லாபத்திற்காக தற்போழுது பழனி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டு, உடுமலை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகளை இணைக்கப்படும் என்ற தகவல் வேகமாக பரவி வருகின்றது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன். தமிழக அரசு உடனடியாக உடுமலை மடத்துக்குளம் பகுதிகளை பழனி மாவட்டத்திற்கு இணைக்க கூடாது. மேலும், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உடுமலையை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். எனவே, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவுப்படி தமிழக சட்டமன்றத்தில் இது குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, தீர்வு காணப்படும்" என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி