சிவசேனா கட்சியின் ஒரு பிரிவான யுவசேனா மாநில துணை தலைவர் திருமுருக தினேஷ், இந்த படத்திற்கு எதிராக திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், "பன்றிக்கு நன்றி சொல்லி எனும் திரைப்பட போஸ்டர் இந்துக்களின் உணர்வை புண்படுத்துவதாகவும், திருமாலின் அவதாரமான கூர்ம அவதாரத்தினை இழிவுபடுத்தி உள்ளதாகவும், திரைப்பட தயாரிப்பாளர் செல்வராஜ், இயக்குநர் பாலா அரண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.