திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி உடுமலை ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் ஊராட்சி நால்ரோடு பகுதியிலிருந்து பழனி மற்றும் அமராவதி சர்க்கரை ஆலை, குரல் குட்டை, உடுமலை செல்லும் நால் ரோடு பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இருப்பினும், இப்பகுதியில் சாலை தானியங்கி சிக்னல் இல்லாத காரணத்தால் அடிக்கடி இரவு மற்றும் பகல் நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.