இதனால் நீண்ட தூரம் சுற்றிக் கொண்டுதான் பள்ளிக்கு வர வேண்டியுள்ளது என புகார் எழுந்தது. இன்று காலை மாணவ மாணவியர்களை அழைத்துவந்த பெற்றோர்கள் ஆத்திரம் அடைந்து திடீரென தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து 30 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் காத்திருந்தன. பின்னர் காங்கேயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி சாலையில் உள்ள மையத் தடுப்புகளை அகற்றுவதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
‘குட் பேட் அக்லி’: கொண்டாட்டத்தை தொடங்கிய அஜித் ரசிகர்கள்