வேளாண்மைத் துறையில் கோவை முதல் இடம் பெற்ற நிலையில், தொழில்துறையிலும் முதலிடம், கல்வியில் கோவை முதலிடம், மருத்துவத்துறையிலும் கோவை முதலிடம், இப்படியாக அத்தனை துறைகளிலுமே தமிழ்நாட்டில் கோவை முதல் இடத்தில் இருக்கிறது. இப்படி இருக்கையில் முதலமைச்சர் கோவைக்கு தனி கவனத்தை செலுத்தி, பல்வேறு திட்டங்களையும், அரசு நிதிகளையும் வழங்கி வருகிறார். குறிப்பாக வேளாண்துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை முதன்முறையாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய அந்த வாய்ப்பினை, வழங்கி வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.
இந்தியாவிலேயே வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தமிழகம் தான். பல ஆண்டுகளாக இலவச மின்சாரத்திற்கு பதிவு செய்து காத்திருந்த, விவசாயிகளுக்கு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியிருக்கிறார் என்று கூறினார்.