சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வருகிற 3ஆம் தேதி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். இதனால் சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.