தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசின் (RD) திட்டமானது சேமிப்பில் பெரிய அளவுக்கு உதவும். இந்த RD திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு எளிதாக கடன் கிடைக்கும். இதில், குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தொடர்ந்து டெபாசிட் செய்திருக்க வேண்டும். ஒரு வருடம் கழித்து, உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50% வரை கடன் பெறலாம். அதனை மொத்தமாகவோ அல்லது தவணையாகவோ திரும்பச் செலுத்தலாம். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், RD கணக்கு முதிர்ச்சியடையும்போது கடனும் வட்டித் தொகையும் கழிக்கப்படும்.