இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கணக்கில் மேலும் ஒரு சாதனை சேர்ந்துள்ளது. ரோஹித் (120) அனைத்து வடிவங்களிலும் ஒரு தொடக்க வீரராக அதிக அரை சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் ஆனார். இதன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் (120) சாதனையை சமன் செய்தார். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா இந்த சாதனையை நிகழ்த்தினார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.