மரப்பலகையால் ஆன உலகின் முதல் செயற்கோளை ஜப்பானின் க்யூட்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உள்ளங்கை அளவிலான இந்த சிறிய செயற்கைக்கோளுக்கு லிக்னோசாட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.