பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்கக் கூடாது என உத்திரப்பிரதேச மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. லக்னோவில் நடைபெற்ற கூட்டத்தில், "பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது. ஜிம் அல்லது யோகா மையங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சி அளிக்கக்கூடாது. பெண்கள் துணிக்கடைகளில் பெண் பாதுகாப்பு அதிகாரிகள் இருக்க வேண்டும் போன்றவற்றை கொண்டு வரலாம்" போன்ற பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.