மகளிர் டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

53பார்த்தது
மகளிர் டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 5, 7, 9ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி க்ளெர்க், அன்னேரி டெர்க்சன், மைக் டி ரிடர், சினாலோ ஜாப்டா, மரிசான் கேப், அயபோங்கா காக்கா, மசபடா கிளாஸ், சுனே லூஸ், எலிஸ்-மாரி மார்க்ஸ், நோன்குலுலேகோ ம்லாபா, துமி செக்குகுனே, க்ளோ ட்ரையோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி