செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகில் உள்ள வசவசமுத்திரம் என்னும் ஊரில் பாலாற்றின் நடுவே அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் மிகவும் பிரபலமானது. இது 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயில் ஆகும். சென்னைக்கு அருகே ஆற்றின் மீது இப்படியொரு கோயிலை வேறு எங்கும் காண முடியாது. குழந்தையின்மை, திருமண தடை, பண பிரச்சனை போன்ற பல்வேறு விஷயங்களுக்கு இங்குள்ள இறைவன் தீர்வளிக்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.