தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பேருந்து விடியல் பயண திட்டம் குறித்து & Citizen Consumer and Civic Action Group(CAG) என்ற பிரபல NGO நடத்திய ஆய்வு குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தின் மூலம் பெரும்பாலான பெண்கள் பயனடைகின்றனர், இத்திட்டத்தின் மூலம் மாதத்திற்கு சராசரியாக ₹800 வரை பெண்கள் சேமிக்கின்றனர், மாதத்திற்கு ₹20,000க்கும் கீழ் வருமானம் ஈட்டும் பெண்களில் 90% பேர் இத்திட்டத்தின் மூலமாக தங்களின் தனிப்பட்ட சேமிப்பை அதிகரித்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.