மனைவி 7 மாத கர்ப்பிணி; இஸ்ரேலில் கணவர் மரணம்

60587பார்த்தது
மனைவி 7 மாத கர்ப்பிணி; இஸ்ரேலில் கணவர் மரணம்
கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த நிபின் மேக்ஸ்வெல் என்பவர் வடக்கு இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதலில் நேற்று பலியானார். இவரது மரணத்தைக் கேட்டு நிபினின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொல்லப்பட்ட நிபினின் மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதாக அவரது தந்தை பத்ரோஸ் தெரிவித்தார். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பத்ரோஸுக்கு நிபின் உட்பட மூன்று மகன்கள் உள்ளனர். இருவர் இஸ்ரேலிலும் ஒருவர் அபுதாபியிலும் பணிபுரிகின்றனர். மகனின் உடல் நான்கு நாட்களுக்குள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று குடும்பத்தினர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர். கேரளாவில் இருந்து பலர் விவசாயப் பணிக்காக இஸ்ரேல் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீன், இஸ்ரேல் போர் காரணமாக இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி