மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. பாமக மகளிர் அணியின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து பாமக வழக்கறிஞர் பாலு முறையிட்ட நிலையில், பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அரசியலாக்குவது ஏன்? என நீதிபதி பி.வேல்முருகன் கேள்வியெழுப்பினார். 'போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் கை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என்று கூறுங்கள்' என்றார்.