பாம்பு விஷத்தை முறிக்கக் கூடிய தன்மை கொண்ட காய் பெயர் ககோடா அல்லது கன்க்ரோல். இது கந்தோலா அல்லது கட்ரல் எனவும் அழைக்கப்படுகிறது. தமிழில் இதை பழுவக்காய் என அழைக்கின்றனர். இது மேற்குவங்கத்தின் கிராமப்புறங்களில் ஏராளமாக வளர்ந்து கிடக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் இதை உணவாக சமைத்து சாப்பிடுகின்றனர். பாம்பு கடித்தவர்களுக்கு இந்த காயை கொடுத்தால் சில நிமிடங்களில் விஷம் முறிந்து, நச்சு உடலில் இருந்து வெளியேறிவிடும் என கூறப்படுகிறது.