சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. 27 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழக அணி, கேரளாவை எதிர்த்து விளையாடியது. இதில் தமிழக அணி 29-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அதிகபட்சமாக முகமது வஹித் 18 கோல்கள் செலுத்தினார்.