அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? என்பது தொடர்பாக நேர்மையான விசாரணை தேவை என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜன. 02) அவர் அளித்த பேட்டியில், "பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் உள்நோக்கமின்றி போராட வேண்டும். குற்றத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்" என கூறினார்.