1901ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு 2024ஆம் ஆண்டு இந்தியாவில் மிக அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை நீண்ட கால சராசரியை விட 0.90 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஆண்டு சராசரி வெப்பநிலை 25.75 டிகிரி செல்சியஸ், நீண்ட கால சராசரியை விட 0.65 டிகிரி அதிகமாக உள்ளது. தமிழகத்தில் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது.