ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் அண்மையில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இதனால் விரக்தியடைந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர், வீரர்களிடம் டிரஸ்ஸிங் ரூமில் கடும் கோபத்துடன் கத்தி பேசியிருக்கிறார். அணிக்கு போதுமான பங்களிப்பு செய்யாத வீரர்கள் நன்றி கூறி வழியனுப்பி வைக்கப்படுவார்கள் என்று வீரர்களின் பெயரை குறிப்பிடாமல் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.