நீங்கள் ஒன்றை கவனித்திருக்கிறீர்களா? பிறர் நமக்கு கிச்சு கிச்சு மூட்டினால் சிரிப்பு வரும். ஆனால் நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்டிக்கொள்ளும் பொழுது சிரிப்பு வருவதில்லை. இதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணம், கிச்சு கிச்சு மூட்டும் பொழுது சிரிப்பு வருவது என்பது அனிச்சை செயல். ஆனால் அதை நமக்கு நாமே செய்து கொள்ளும் பொழுது நம் மூளைக்கு முன்கூட்டியே தெரிந்து விடுகிறது. எனவே இங்கு அனிச்சை செயல் நிகழ்வதில்லை. எனவே நமக்கு சிரிப்பு வருவதில்லை.