தினமும் மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வருவது போல சிலருக்கு தோன்றும். சாப்பிட்டவுடன் உடலானது அதை செரிமானம் செய்ய ரெஸ்ட் மோடிற்கு செல்லும். இந்த சமயத்தில் உணர்ச்சிகளைத் தூண்டும் வேகஸ் நரம்பு (vagus nerve) தூண்டப்படுகிறது. இது சாப்பிட்ட உணவுக்கு தனது பங்களிப்பை தருகிறது. இதனால் தான் தூக்கம் வருகிறது. இதை தவிர்க்க தினசரி தூங்கும் நேரத்தை வரையறுத்து அதற்குள் தூங்கி எழ முயற்சி செய்ய வேண்டும்.