நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு கடந்த அக்.27ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், “மக்களை பிளவுபடுத்தும் ஃபாசிச பாஜகவை விஜய் வெளிப்படையாக விமர்சிக்காதது ஏன்?. ஃபாசிசத்தை எதிர்த்து நிற்கும் சக்திகளை பாயாசமா எனக் கேலி செய்வது யாரை மகிழ்ச்சிப்படுத்த?. வெற்று ஆரவாரங்கள் மட்டுமே வெற்றியாய் விளைந்து விடாது" என கருத்து தெரிவித்துள்ளார்.