உலகின் மிகப்பெரிய அதிக எடை கொண்ட க்ரோஷிக் என்ற பூனை உயிரிழந்தது. ரஷ்ய மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்ட இந்த பூனை உடல் எடையை குறைக்கும் முயற்சி ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இந்த பூனை பிஸ்கட் மற்றும் சூப் சாப்பிட்டு 17 கிலோ எடையுடன் வலம் வந்தது. அதிக எடை காரணமாக க்ரோஷியால் நடக்க கூட முடியவில்லை. தற்போது பூனை திடீரென சுவாசக் கோளாறு காரணமாக இறந்தது. பூனையை பரிசோதித்த நிபுணர்கள் அதன் உள் உறுப்புகளில் கட்டிகள் இருப்பதாக தெரிவித்தனர்.