“எதிர்கட்சியினர் எதுக்கு கொண்டாடுறீங்க?” மோடி கேள்வி

73பார்த்தது
“எதிர்கட்சியினர் எதுக்கு கொண்டாடுறீங்க?” மோடி கேள்வி
தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று (ஜூன் 7) நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு, நிதீஷ், ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி 10 ஆண்டுகளாகியும் காங்கிரஸ் கட்சியால் 100 இடங்களை கூட ஜெயிக்க முடியவில்லை. குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத எதிர்க்கட்சியினர் எதற்காக கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்? என்பது எனக்கு தெரியவில்லை” என பேசினார்.

தொடர்புடைய செய்தி