திருட்டில் ஈடுபட்ட இருவர்.. மரத்தில் மோதி பலி

57பார்த்தது
திருட்டில் ஈடுபட்ட இருவர்.. மரத்தில் மோதி பலி
சென்னையைச் சேர்ந்த மாரி (25), நாமக்கல்லைச் சேர்ந்த நவீன் (30) ஆகிய இருவரும் நாமக்கல்லை அடுத்த அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி கணவாய்ப்பட்டி அருகே சாலை ஓரத்தில் வலிப்பு வந்தது போல் நடித்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த பொன்னார் (31) என்பவர் அவர்களுக்கு உதவ சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென பொன்னாரை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த 5 ஆயிரம் பணம், செல்ஃபோன், இருசக்கர வாகனத்தின் சாவியை திருடிச்சென்றுள்ளனர். பின்னர் நாமக்கல் நோக்கி செல்லும்போது தனியார் கல்லூரி அருகே இரு மரத்தின் மீது மோதியுள்ளனர். இதில் மாரி (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நவீன் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி