பெண்களின் சட்டைகளின் பட்டன்கள் இடதுபுறத்திலும், ஆண்களின் சட்டையில் வலதுபுறத்திலும் இருக்கும். இது ஏன் யோசித்ததுண்டா? அதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில், கடந்த காலங்களில் மேல்தட்டு பெண்கள் பெரும்பாலும் அவர்களின் உடையை தாங்களாகவே அணியமாட்டார்கள். உதவியாளர்களை வைத்து அணிவதால் இடதுபுறத்தில் பெண்களுக்கான பட்டன்கள் இருப்பதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று. பணக்காரப் பெண்களுக்கான சட்டை பட்டன்கள் வலது கைப்பழக்கம் உள்ள பணிப்பெண்கள் மூடுவதை எளிதாக்கியது.